தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

0
8

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை தெஹிவளையில் திறந்துள்ளதன் மூலம், அதன் கிளை விஸ்தரிப்பின் மற்றுமொரு கட்டத்தை அடைந்துள்ளது. HNB FINANCEஇன் இந்த புதிய கிளை இல. 176, காலி வீதி, தெஹிவளையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

HNB FINANCEஇன் தெஹிவளை புதிய கிளை திறப்பு நிகழ்விற்கு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மதுரங்க ஹீன்கெந்த ஆகியோரின் தலைமையில் சுப முகூர்த்தத்தில் திறந்து வைக்கப்பட்டதுடன் இந்நிகழ்விற்கு நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவம் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

HNB FINANCE PLC வழங்கும் அனைத்து நிதிச் சேவைகளும் தெஹிவளை கிளையில் கிடைக்கின்றன, மேலும் இந்த சேவைகளில் லீசிங், சேமிப்பு, நிலையான வைப்பு, வணிகக் கடன், வீட்டுக் கடன் மற்றும் தொழில்துறையில் மிகவும் பிரபலமான தங்கக் கடன் சேவை ஆகியவை அடங்கும். தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாறுபடும் பல தங்கக் கடன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, நிறுவனத்தின் தங்கக் கடன் சேவைகளான Gold Loan Gold Plan மற்றும் VIP Gold Loan ஆகியவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள அனைத்து தங்க கடன் சேவைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன.

HNB FINANCE ஐப் பொருத்தவரையில் எங்கள் நோக்கம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான நிதிச் சேவையை வழங்குவதாகும். தெஹிவளையிலுள்ள இந்த புதிய கிளையின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த நிதி சேவை அனுபவத்தையும், மிக இலகுவாக அணுகக் கூடிய வசதிகள் தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளுடன் சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த புதிய கிளையை வாடிக்கையாளர்களுக்கு உகந்த சேவை மத்திய நிலையமாக மேம்படுத்துவதில் எங்களின் பணிவான மகிழ்ச்சி.” என HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here