சிறுவர்களின் ஆன்லைன் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தீர்க்க, TikTok மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) ஆகியவை 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.
அமெரிக்க நீதித் துறை மற்றும் கூட்டாட்சி வர்த்தக ஆணைக்குழு (FTC) இணைந்து தொடர்ந்த வழக்கில், பெற்றோரின் அனுமதியின்றி 13 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்து, கூட்டாட்சிச் சட்டத்தை மீறியதாக டிக்டாக் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இத்தொகையில் 300 மில்லியன் டொலர்களை TikTok உடனடியாகச் செலுத்தும் என்றும், மீதி 100 மில்லியன் டொலர்கள் பின்னர் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதத் தொகைகளில் இதுவும் ஒன்றாகும்.
TikTok செயலி சிறுவர்களின் பாதுகாப்பிற்குப் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் தற்போது TikTok மீது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

