சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 2,650 கிலோவிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 மீனவர்கள் கைது!

0
6

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இன்று (2026 ஜூலை 21) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 2,650 கிலோவிற்கும் அதிகமான சுறா மீன்கள் மற்றும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் திகதியிடப்பட்ட 1938/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் விதிகளை மீறி, ‘அலோபியாஸ் வுல்பினஸ்’ (Alopias Vulpinus) மற்றும் ‘கார்சார்ஹினஸ் லாங்கிமானஸ்’ (Carcharhinus Longimanus) ஆகிய தடைசெய்யப்பட்ட சுறா மீன் வகைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன் தொகுதி மற்றும் மீன்பிடிப் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு உதவி மீன்பிடி பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here