பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி: “அர்ச்சுனாவிற்கு மருந்து எடுத்துக்கொண்டு வரச் சொல்லுங்கள்” – பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண காரசார உரை!

0
5

இலங்கை பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசார விவாதமும் அமளியும் ஏற்பட்டது.

விவாதத்தின் போது, சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருந்த பிரதி சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண அவர்களை பேசுமாறு கேட்டுக்கொண்டார்.
எனினும், பிற உறுப்பினர்கள் குறிக்கிட்டு தொடர்ச்சியாக கூச்சலிட்டு இடையூறு ஏற்படுத்தியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இடையூறுகளுக்கு மத்தியிலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, “அர்ச்சுனாவிற்கு மருந்து எடுத்துக்கொண்டு வரச் சொல்லுங்கள்; அவர் இன்று உட்கொள்ள வேண்டிய தினசரி மருந்து மாத்திரைகளை உட்கொள்ளவில்லை போல தெரிகிறது” என காரசாரமாக விமர்சித்தார்.

அவையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்கள் மற்றும் ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், பிரதி சபாநாயகர் சூழலைத் தணித்து, உறுப்பினரைத் தனது உரையைத் தொடருமாறு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here