தமிழில் அதிரடி ஆக்ஷன் கலந்த மசாலா திரைப்படமாக உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தை பிரபல நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, பிரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜூ சுந்தரம் மற்றும் ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் டைட்டில் கார்ட் (Title Card) விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த டைட்டில் கார்டில் நடிகர் விஜய், தனது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது திரையரங்குகளில் ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

