
நாட்டின் சில பகுதிகளில் நாளை (03) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், மொனராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய, பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் சில இடங்களில் ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தேவையான அளவு நீர் அருந்துமாறும், முடிந்தவரை நேரடியாக வெயில் படுவதைத் தவிர்க்குமாறும், நாளின் அதிக வெப்பமான நேரங்களில் வெளிப்புறச் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
