இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடைகளை அறிமுகம் செய்தது MAS

0
7

ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டுப் விழாவில் பங்கேற்கும் இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ விளையாட்டு ஆடைகளை, அதன் உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளரான எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ் (MAS Holdings) நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 20ஆவது ஆசிய விளையாட்டு விழா இம்மாதம் 19 ஆம் திகதி முதல் அக்டோபர் 4 ஆம் திகதி வரை ஜப்பானின் அய்ச்சி மாகாணம் மற்றும் நகோயா நகரங்களில் நடைபெறவுள்ளன. அந்த வகையில், தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஆசிய விளையாட்டு விழாவுக்கான ஆடைகள், கொழும்பில் உள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் டங்கன் வைட் கேட்போர்கூடத்தில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளர் என்ற வகையில், வில்வித்தை, தடகளம், பெட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், துடுப்புப் படகோட்டம், ரக்பி, பாய்மரப் படகோட்டம், ஸ்குவாஷ், சர்ஃபிங், மேசைப்;பந்து, கடற்கரை கரப்பந்தாட்டம், பளுதூக்குதல், மல்யுத்தம், ஹொக்கி, கூடைப்பந்து, வூசு மற்றும் கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கு MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆடைகளை வழங்கவுள்ளது.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வேறு விதமான உடல் அசைவுகள், சௌகரியம் மற்றும் பல்வேறு தேவைகள் என்பவற்றை கருத்தில் கொண்டு, இலங்கை அணியின் தனித்துவமான அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆடைகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here