அக்டோபர், நவம்பரில் கனமழைக்கு வாய்ப்பு: எல் நினோ தாக்கத்தால் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

0
4

தற்போது நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்பட்டாலும், இது பரவலான அல்லது கணிசமான மழைவீழ்ச்சி அல்ல எனவும், குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு மட்டுமே வரம்பிற்குட்பட்டதாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி கசுன் பஸ்க்குவல் தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சியை எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே எதிர்பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இக்காலப்பகுதியில் நாட்டின் பல பாகங்களுக்கும் பரவலாக மழை கிடைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போது நிலவிவரும் வலுவான ‘எல் நினோ’ காலநிலை நிலைமை காரணமாக, இம்முறை எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சியானது மிகவும் தீவிரமடைந்து, பலத்த மழையாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இக்காலப்பகுதி நெருங்கும்போது இதுகுறித்த விரிவான மற்றும் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் தொடர்ச்சியாக வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here