ஃபிளைதுபாய் விமானத்தில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி: கோ-பைலட் கோடரியால் தாக்கியதாக ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!

0
5

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிளைதுபாய் (Flydubai) விமானத்தில், துணை விமானி (Co-pilot) கோடரியைப் பயன்படுத்தி விமானியைத் தாக்கி விமானத்தைக் கைப்பற்ற முயன்றது ஒரு ‘பயங்கரவாதச் செயல்’ என்று ஐக்கிய அரபு அமீரக (UAE) அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

துபாயில் இருந்து 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஃபிளைதுபாய் விமானம் (FZ1073) வான்வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, விமானத்தின் துணை விமானியான ஹம்மாம் அல்-ஹம்மாமி (ஓமன் நாட்டைச் சேர்ந்தவர்), விமான அறைக்குள் (Cockpit) இருந்த அவசரகால கோடரியை எடுத்து இந்திய நாட்டைச் சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் (Captain Smit Machchhar) மீது திடீர் தாக்குதல் நடத்திவிட்டு விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயன்றுள்ளார்.

இந்தத் தாக்குதலாலும் திடீர் போராட்டத்தாலும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து சில நொடிகளில் பல்லாயிரக்கணக்கான அடி கீழ்நோக்கிச் சரிந்தது.

கடுமையாகக் காயமடைந்த நிலையிலும், விமானி ஸ்மித் மச்சார் தனது கடைசி முயற்சியாக விமான அறை கதவைத் திறக்க, உடனே விழிப்புடன் இருந்த பயணிகளும் விமானத்தில் பயணம் செய்த ஓய்வுபெற்ற மற்ற விமானிகளும் விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானியை மடக்கிப் பிடித்துக் கட்டுப்படுத்தினர்.

பின்னர் விமானம் சவூதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து ஐக்கிய அரபு அமீரக தலைமைப் Prosecutor ஹமாத் சைஃப் அல்-ஷம்சி கூறுகையில், இது திட்டமிடப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி என்றும், இதுகுறித்து தீவிரமான முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சல் உலகம் முழுவதும் உள்ளவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here