உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர் தாக்குதல்: இரண்டாவது முக்கிய பாலமும் தகர்ப்பு

0
6

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அங்குள்ள இரண்டாவது முக்கிய பாலமான ‘வடக்கு பாலம்’ (Northern Bridge) ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்துள்ளது.

கீவ் நகரை இரண்டாகப் பிரிக்கும் டினிப்ரோ (Dnipro) ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலங்களை குறிவைத்து ரஷ்யா கடந்த சில நாட்களாகத் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

முன்னதாக கீவ்வின் தெற்குப் பாலம் (Southern Bridge) மீது அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது வடக்கு பாலமும் தாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பாலத்தின் சாலைப் பகுதிகளும், மின்சாரக் கம்பிகளும் சேதமடைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தலைநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா நடத்தி வரும் இந்தத் தாக்குதல்கள் நிலைமையை மிகவும் தீவிரமாக்கியுள்ளதாக கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ கவலை தெரிவித்துள்ளார்.

தொடர் தாக்குதல்களால் உக்ரைன் தலைநகரில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here