ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்த ஈரானின் புதிய திட்டம்!

0
4

ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெசாய் தெரிவித்துள்ள தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் சோதனைகளை முழுமையாக ஈரானின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர புதிய பாதுகாப்புத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக, உளவுப் பணிகளில் ஈடுபடும் அல்லது பகைமை பாராட்டும் நாடுகளின் கப்பல்கள் நீரிணைக்குள் நுழையத் தடை விதிக்கப்படும்.

நீரிணையைக் கடந்து செல்லும் கப்பல்களிடம் இருந்து சேவைக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களை வசூலிப்பதற்கான விதிகளை ஈரானிய இராணுவம் நிர்ணயிக்கும்.

உலகின் எந்தப் பகுதியிலும் ஈரானின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டால், அதற்குப் பொறுப்பான நாட்டிற்கு எதிராக ஹோர்முஸ் நீரிணையில் வரிகளை உயர்த்தியோ அல்லது சொத்துக்களைப் பறிமுதல் செய்தோ ஈரான் பதிலடி கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here