வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை: அலட்சியத்தால் அதிகரிக்கும் வாகனத் திருட்டுகள்!

0
3

வாகன உரிமையாளர்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் F.U.வூட்லர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் எஞ்சின்களை இயங்கிய நிலையிலேயே விட்டுச் செல்வது, சாாவிகளை வாகனங்களிலேயே விட்டுச் செல்வது போன்ற சந்தர்ப்பங்களை குற்றவாளிகள் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.

வீடுகளின் வெளிப்பக்க வாயில்களை பூட்டாமல் விட்டுவிடும் போது, முற்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் திருடப்படுவதாகவும் அறிக்கைகள் கிடைத்துள்ளன.

வாகனங்களுக்குள் வைக்கப்படும் முக்கியமான ஆவணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களும் இதன்போது களவாடப்படுகின்றன.

நெரிசல்மிக்க பகுதிகள் அல்லது வர்த்தக மையங்களில் வாகனங்களை நிறுத்தும் போது, அங்குள்ள பாதுகாப்பு அதிகாரியிடம் அறியப்படுத்துங்கள்.

இருட்டான மற்றும் ஆளரவமற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்கவும்.

வாகனம் திருடப்பட்டால் உடனடியாக 119 அல்லது 118 என்ற அவசர இலக்கத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here