இலங்கையில் ஜூலை மாத பணவீக்கம் 7.2% ஆக உயர்வு!

0
3

இலங்கையின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்கத் தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த ஜூன் மாதத்தில் 6.5% ஆக காணப்பட்ட ஒட்டுமொத்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் 7.2% ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் இருந்த 3.3% இலிருந்து ஜூலையில் 4.9% ஆக அதிகரித்துள்ளது.

மேலும் உணவு அல்லாத பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9.3% ஆக இருந்த நிலையில், ஜூலையில் 9.2% ஆக சற்றே குறைந்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here