ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறான நிலையில் பிரித்தானியாவின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த இராஜதந்திரிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளதால் வழக்கில் பாரிய திருப்பங்களும், சர்ச்சைகளும் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பின்னணியில் சிவில் சமூகச் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் இது குறித்து தகவல்களை கோரியிருந்தார். ஆனால் பிரித்தானியாவின் தகவல் ஆணைக்குழு ஆரம்பக்கட்டத்தில் சில எதிர்ப்புகளை தெரிவித்திருந்தது.

