‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு!

0
7

பரபரப்பான மற்றும் நகைச்சுவை கலந்த பேண்டஸி திரைப்படமாக கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய ஏ.கே. சரவணனே இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

பேஷன் ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் சுதன் சுந்தரம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஆதி பினிஷெட்டி (நிக்கி கல்ராணி பினிசெட்டி), முனிஷ்காந்த், ஆனந்தராஜ், சத்யராஜ், பிரியா பவானி சங்கர், டேனியல் அன்னி போப், அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து, அடுத்த கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here