பொருளாதாரத்தில் புதிய மைல்கல்: இந்தியாவுக்கான இலங்கை ஏற்றுமதி 7.22% உயர்வு!

0
9

2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவுக்கான இலங்கையின் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி 7.22 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தரவுகளின்படி, இதன் மதிப்பு 669.36 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 624.31 மில்லியன் டொலர்களாக இருந்த இந்த ஏற்றுமதி மதிப்பு, இந்த ஆண்டு சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கான ஏற்றுமதி 9.12 சதவீதத்தால் அதிகரித்து 129.51 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.

பாய்லர்கள் , பிஸ்டன் என்ஜின்கள், பம்புகள், பெட்ரோலிய எண்ணெய்கள், விலங்குத் தீவனம் மற்றும் அடிப்படை உலோகப் பொருட்கள் போன்ற உற்பத்திகளின் ஏற்றுமதி அதிகரித்தமையே இந்த வளர்ச்சிக்குப் பிரதான காரணம் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.”

இந்தியா மட்டுமன்றி, ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்துக்கான இலங்கையின் ஏற்றுமதியும் 11.98 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து 916.55 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளமை நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஒரு சாதகமான சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here