நேபாளம்-திபெத் எல்லையில் வெள்ளம் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இலங்கைத் தமிழர்கள் மாயம்

0
6

நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பேரழிவு வெள்ளத்தில் சிக்கி, அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இலங்கைத் தமிழர்கள் மாயமாகியுள்ளனர்.

சிட்னியைச் சேர்ந்த சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி ஷைலஜா மற்றும் மகன்கள் அஷ்வின், ஆருஷ் ஆகியோரே காணாமல் போனவர்களாவர்.

யாழ்ப்பாணம் கோப்பாயைப் பூர்வீகமாகக் கொண்ட இக்குடும்பத்தினர், கைலாய யாத்திரைக்காகச் சென்றிருந்தபோதே, ஆகஸ்ட் 26 அன்று இந்த இயற்கைச் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

“கடந்த ஆகஸ்ட் 26 அன்று காலை, ‘நாங்கள் காலை உணவை முடித்துவிட்டு எல்லைப் பகுதிக்குச் செல்கிறோம்’ என உறவினர்களிடம் இவர்கள் பேசியதே கடைசித் தொடர்பாகும். அதன்பின், அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் வீதிகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன.

இவர்களுடன் சேர்த்து மொத்தம் 43 அவுஸ்திரேலியர்கள் நிலவரம் அறியப்படாமல் மாயமாகியுள்ளனர். தற்போது, மீட்புப் பணிகளுக்கு உதவ ஆஸ்திரேலிய அவசரக்காலப் படையினர் நேபாளத்திற்கு விரைந்துள்ளனர்.”

மீட்புக் குழுவினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், காணாமல் போன நான்கு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என அவர்களது குடும்பத்தினரும் புலம்பெயர் சமூகமும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here