புலத்கோஹுபிட்டியவில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை குட்டி மீட்பு!

0
9

புலத்கோஹுபிட்டிய, தெடுகல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த நன்கு வளர்ந்த சிறுத்தை குட்டி ஒன்று, எவ்வித காயங்களுமின்றி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கால்நடை மருத்துவர்களின் வழிகாட்டலுடன் களமிறங்கிய வனஜீவராசிகள் அதிகாரிகள் சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுத்தை குட்டியை தாய் சிறுத்தையுடன் மீண்டும் சேர்க்க முயன்றபோதிலும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனையடுத்து, மேலதிக சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக அச்சிறுத்தை ரந்தெனிகல வனஜீவராசிகள் சுகாதார மேலாண்மை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு அவசியமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிறுத்தையை அதன் இயற்கை வாழ்விடத்தில் மீண்டும் விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அரிய வகை பாலூட்டியான சிறுத்தை, அழிவின் விளிம்பில் உள்ள விலங்காக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

எனவே, சிறுத்தைகள் வீடுகளிலோ அல்லது கண்ணிகளிலோ அகப்பட்டிருப்பதை கண்டால், பொதுமக்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு விலகி, வனஜீவராசிகள் திணைக்களத்தின் 1992 என்ற அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here