“நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?” – தடைகளைத் தகர்த்து யாழில் உறவுகள் மாபெரும் போராட்டம்!

0
9

யாழ்ப்பாணம்: “நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?” என்கிற முழக்கத்துடன், யாழ். செம்மணிப் பகுதியில் இன்று மாலை மாபெரும் தன்னிச்சையான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணி மனித புதைகுழிப் பகுதிக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முற்றுகைப் போராட்டம் வெடித்தது. வட கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.

பொலிஸாரின் தடையுத்தரவு

இப்போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கப் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் நோக்கில், பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் கட்டளைகளைப் பெற்றிருந்தனர்.

தடைகளை மீறிய மக்கள்
நீதிமன்றக் கட்டளையை அடுத்து செம்மணிப் பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


> தடைகளைத் தகர்த்த உறவுகள்: பொலிஸாரின் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் சம்பவ இடத்தில் திரண்டு வந்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
>
நீதி அமைச்சரின் வருகைக்கு எதிராக மக்கள் ஆக்ரோஷமாக முழக்கங்களை எழுப்பியதால், செம்மணிப் பகுதியில் இன்று மாலை பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here