இஸ்ரேலின் கட்டுமானத் துறைப் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 133 இலங்கைத் தொழிலாளர்கள் நாளை நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் கட்டமைப்புத் துறைகளில் பணியாற்றுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அவர்களுக்கான விமானப் பயணச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வும் அண்மையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பணியகத்தின் தலைவர் கோஷல விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்டுமானத் துறைக்குத் தேர்வான 133 தொழிலாளர்களுக்கும், கட்டமைப்புத் துறைக்குத் தேர்வான 17 தொழிலாளர்களுக்கும் விமானப் பயணச்சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்காகத் தேர்வான தொழிலாளர்கள் நாளை இஸ்ரேல் நோக்கிப் பயணமாகவுள்ளனர்.

