நாமல் ராஜபக்ஷவின் கைது – UNPஐ கடுமையாக விமர்சித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

0
8

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்ட விவகாரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நிலைப்பாட்டை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே நாமல் ராஜபக்ஷ ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

“நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டப்படுவதோ அல்லது விளக்கமறியலில் வைக்கப்படுவதோ புதிதான ஒன்று அல்ல. ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான சுமார் 100 மில்லியன் ரூபாய் லஞ்சக் குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விரிவான விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் தகவல்களை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமலின் கைதைத் தொடர்ந்து UNP வெளியிட்ட அறிக்கையைக் குறிப்பிட்ட அமைச்சர், நீண்டகாலமாக UNP-ஐ நேசிக்கும் ஆதரவாளர்களே இந்த அறிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைவார்கள் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here