தரமற்ற டயப்பர்களை விற்ற 5 கடைகளுக்கு ரூ. 1.4 லட்சம் அபராதம்: முழு இருப்பையும் அழிக்க உத்தரவு

0
9

நுகர்வோரிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, இறக்குமதியாளர் விபரங்கள் இன்றி குழந்தை மற்றும் பெரியோருக்கான செனிடரி நெப்பின்களை விற்பனை செய்த ஐந்து வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் 1,40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிலவற்றை பயன்படுத்தும் போது சேதமடைந்து கிழிந்து போவதாக நுகர்வோர் முறையிட்டிருந்தனர்.

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த புகார்களை அடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் விசாரணைகளும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது இணையதள விபரங்கள் இன்றி டயப்பர்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விநியோகித்தமைக்காக, இலக்கம் 85 கட்டளையை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இந்த ஐந்து வணிக நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறான சந்தை முறைகேடுகள் தொடர்பான புகார்களை 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கம் (ர்ழவடiநெ) மூலம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்குத் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here