கரையோர மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

0
3

நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களுக்கு கடல் கொந்தளிப்பு குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இன்று மாலை 5:30 மணி முதல் நாளை மாலை 5:30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

குறிப்பிடப்பட்டுள்ள கடற்பிராந்தியங்களில் சுமார் 2.5 முதல் 3 மீட்டர் உயரம் கொண்ட கொந்தளிப்பான அலைகள் எழக்கூடும்.

அத்துடன் பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகள் அலைகளின் பெருக்கத்தால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடற்படையினர் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here