டொரண்டோவில் நடைபெற்று வரும் கனேடியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில், போலந்தின் முன்னாள் உலக முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ரஷ்ய வீராங்கனை டியானா ஷ்னைடருக்கு எதிரான போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக், 62 நிமிடங்களில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்றார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில், உக்ரைனின் முன்னணி வீராங்கனையான எலினா ஸ்விடோலினா முதல் செட்டை 3-6 என இழந்த போதிலும், அடுத்தடுத்த செட்களை 6-0, 6-3 எனக் கைப்பற்றி பிரம்மாண்டமான வெற்றியப் பதிவு செய்தார்.
இதன் மூலம் புதன்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் மற்றும் எலினா ஸ்விடோலினா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
வரவிருக்கும் யு.எஸ். ஓபன் தொடருக்கு முன்பாக இந்த வெற்றி ஸ்வியாடெக்கிற்கு பெரும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது.

