டெல்லி கெப்பிடல்ஸ் வீரர் அபிஷேக் பொரெல் கைது

0
4

டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பெங்கால் அணி வீரர் அபிஷேக் பொரெல், பாலியல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஹூக்ளி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 23 வயதான அபிஷேக் பொரெல், நீதிமன்ற உத்தரவின்படி 3 நாட்கள் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மொக்ரா பொலிஸ் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், நீதிமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மின்னணு சாதனங்களைக் கைப்பற்றவும், விசாரணையைத் தீவிரப்படுத்தவும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here