இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் ஊடாக வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குரல் கொடுத்தார்

0
4

வெளிநாடுகளுக்குச் சென்று நல்லதொரு வேலையைப் பெற்று, நல்ல வருமானத்தை ஈட்டி, அதனைத் தமது குடும்பங்களுக்கு வழங்கி சிறந்ததொரு குடும்ப வாழ்க்கையை வாழ்வதே இளைஞர்களின் கனவாக அமைந்து காணப்படுகின்றன.

நாட்டிற்கு அவசியமான வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்க வெளிநாட்டு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். அவர்கள் சிறந்த சேவையாற்றுவதுடன், நாட்டின் பொருளாதார முதுகெலும்பிற்கு அவர்கள் பெரும் பக்க பலத்தை சேர்த்து வருகின்றனர் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இடையில் பல்வேறு துறைகளில் 14,000 வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு 2023 ஆம் ஆண்டில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. எனினும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டளவில் இந்த நிலைமை முற்றிலுமாக மாறி காணப்படுகின்றன. தற்சமயம் அரசாங்கத்தால் இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தொகையில் 70 வீதமானவை தனியார் துறை ஊடாக அனுப்பப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தனியார் துறைக்குரிய 30 வீதம் அரசாங்கத்திற்குச் சென்றுள்ளதாகவும், இது பாரிய மோசடி நிலையாகும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் ஊடாக வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்து, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று (06) பொல்துவ சந்தியில் முன்னெடுத்திருந்த அமைதி வழியிலான ஆரப்பாட்ட இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கங்கள் ஊடாகச் செல்லும் ஊழியர்களுக்கு 4 இலட்சம் ரூபா செலவாவதுடன், தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஊடாகச் செல்லும் ஊழியர்களுக்கு சுமார் 45 இலட்சம் ரூபா வரை செலவாகின்றன. ஒரு ஊழியரை அனுப்பி வைப்பதில் தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 5000 அமெரிக்க டொலர்கள் கிடைக்கின்றன. இஸ்ரேலுக்குச் செல்லத் தகுதி பெற்ற 3500 பேர் காணப்படுகின்றனர். 45 இலட்சம் ரூபா தொகையை அறவிட்டு தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஊடாக இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பது நியாயமற்ற செயலாகும். இதன் மூலம் தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் நல்ல இலாபத்தை ஈட்டி வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு தொழில்வாய்ப்பு நிமித்தம் செல்வதற்கு காத்துக்கொண்டிருக்கும் 3500 பேரினது கனவை நனவாக்க பாராளுமன்றத்தில் இப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். 2023 இல் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைவாக அரசாங்கம் அனுப்பும் சதவீதத்திற்கு அமைய 70 வீதமாகவும், தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அனுப்பும் சதவீதம் 30 வீதமாகவும் மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஊடாக இஸ்ரேல் செல்லும் தரப்பினர் பாரிய அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதற்கு நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சாதாரண மக்களைப் பாதுகாப்போம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதுடன், அதனை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேலுக்குச் செல்லத் தகுதி பெற்ற 3500 பேருக்கும் நீதியை நிலைநாட்ட வேண்டும். இத்திறமையாளர்கள் குறைந்த செலவில் இஸ்ரேலுக்குச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசாங்கத்தின் ஊடாகச் செல்லக்கூடிய முறைகளை அதிகரிக்க வேண்டும். எனவே, இம்முறைமை செயற்படுத்தப்பட்டால் அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளுக்குச் செல்லும் தரப்பினருக்கும் பாரிய நன்மை கிடைக்கும். வேலைவாய்ப்பு எதிர்நோக்கியிருக்கும் தரப்பினருக்கு பாராளுமன்றத்திற்குள் குரல்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

இளைஞர்கள் 45 இலட்சம் செலுத்தி இஸ்ரேலுக்குச் செல்வதற்குப் பதிலாக, 4 இலட்சம் ரூபா பணத்தைச் செலுத்தி இஸ்ரேலுக்குச் செல்வதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும். இந்நோக்கத்தையும் இலக்கையும் நோக்கி இந்த இளைஞர்கள் பயணிக்க ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here