இஸ்ரேலுக்கு எதிராகப் பிரித்தானியாவின் அதிரடித் தடை!

0
7

மேற்குக்கரையில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து பிரித்தானிய அரசாங்கம் அதிரடித் தடைகளை அறிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நிலப்பரப்பைச் சட்டவிரோதமானதாகப் பிரித்தானியா இப்போது கருதுவதாக அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் எட்வர்ட் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, சட்டவிரோதக் குடியேற்றங்களின் கட்டுமானம் மற்றும் வணிகங்களை விளம்பரப்படுத்தும் குறிப்பிட்ட சேவைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இருநாடுகள் தீர்வை இஸ்ரேல் சீர்குலைப்பதாகக் கருதும் பிரித்தானியா, அதற்கு எதிராகவே இநடவடிக்கையை எடுத்துள்ளது.

இருப்பினும், இந்தத் தடைகள் இஸ்ரேலியப் பொருட்கள் மீதான மறைமுகப் புறக்கணிப்பாக மாறக்கூடும் என்ற கூற்றை மிலிபான்ட் மறுத்துள்ளார். அதேவேளை, பிரித்தானியாவின் இந்நடவடிக்கைக்குப் பதிலாக அமெரிக்கா வர்த்தகத் தடைகள் அல்லது வரிகளை விதிக்கக்கூடும் என இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபி (Mike Huckabee) எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவின் இந்த முடிவு சர்வதேச அளவில், குறிப்பாக அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here