அத்துருகிரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

0
4

அத்துருகிரிய, வளேகடே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் குறித்த இளைஞனின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here