இலங்கையில் அதிர்ச்சி புள்ளிவிபரம்: இந்த ஆண்டில் மாத்திரம் 1,700க்கும் மேற்பட்டோர் பலி!

0
3

நாட்டில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்த வீதி விபத்துக்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தரவுகளை வீதிப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் இடம்பெற்ற 1,654 கொடிய வீதி விபத்துக்களில் 1,749 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடுமையான விபத்துக்களால் 4,556 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 7,295 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

விபத்துக்கள் காரணமாக 3,232 சொத்து சேத சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வீதிப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் விபத்துக்களைத் தவிர்க்கவும் சாரதிகளும் பாதசாரிகளும் வீதி விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here