இலங்கையின் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டிற்குள்!

0
3

இலங்கை அரசாங்கம் தனது டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்தின் கீழ், நாட்டின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் இந்த திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து தெளிவுபடுத்தினர்.

அமைச்சின் அதிகாரிகளின் கூற்றுப்படி, டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான தேவையான அனைத்து முதற்கட்ட தயாரிப்புகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரசாங்கத்தின் பரந்த டிஜிட்டல் மாற்றத்திற்கான தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here