இலங்கை அரசின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்தின் கீழ், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து போக்குவரத்து அபராதங்களையும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தும் புதிய முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் அரச நிறுவனங்களுடனான பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்ட GovPay அமைப்பின் கீழ் இந்த இணையவழி அபராதக் கட்டண வசதி செயல்படுத்தப்படுகிறது.
2030ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் டொலராக உயர்த்தும் அரசின் பரந்த தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

