இணையவழி பணப் பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, திட்டமிட்ட முறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் வைத்து விசேட அதிரடி சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் கல்கிசை மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29, 31 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
.பறிமுதல் செய்யப்பட்டவை:
ஹேஷ்: 1 கிலோகிராம் 34 கிராம்
ஐஸ்: 7 கிராம் 420 மில்லிகிராம்
ஹெரோயின்: 8 கிராம் 860 மில்லிகிராம்
பணம்: ரூபா 351,200
வாகனங்கள்: 2 சொகுசு கார்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடைய ஏனைய கடத்தல்காரர்கள் மற்றும் இவர்களின் வங்கி கணக்கு விபரங்கள் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

