ஆன்லைன் மூலம் போதைப்பொருள் வியாபாரம்: நீர்கொழும்பில் இருவர் சொகுசு கார்களுடன் கைது!

0
7

இணையவழி பணப் பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, திட்டமிட்ட முறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் வைத்து விசேட அதிரடி சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

​நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் கல்கிசை மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29, 31 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

.பறிமுதல் செய்யப்பட்டவை:

ஹேஷ்: 1 கிலோகிராம் 34 கிராம்

ஐஸ்: 7 கிராம் 420 மில்லிகிராம்

ஹெரோயின்: 8 கிராம் 860 மில்லிகிராம்

பணம்: ரூபா 351,200

வாகனங்கள்: 2 சொகுசு கார்கள்

​கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடைய ஏனைய கடத்தல்காரர்கள் மற்றும் இவர்களின் வங்கி கணக்கு விபரங்கள் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here