ஆசிய விளையாட்டுப் போட்டி –  இந்தியா vs பாகிஸ்தான் மோதல் எப்போது சாத்தியம்?

0
5

ஜப்பானின் நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆரம்பக் கட்டப் போட்டிகளில் மோத வாய்ப்பில்லை.

இருப்பினும், இவ்விரு அணிகளும் சந்தித்தால் அது பதக்கத்துக்கான மாபெரும் ஆட்டமாகவே அமையும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலுமே தரவரிசையில் முன்னணி வகிக்கும் இவ்விரு அணிகளும் லீக் சுற்றுகளில் மோதாத வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, அவை சந்தித்தால் அது தங்கம் அல்லது வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியாக மட்டுமே இருக்க முடியும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் ஒக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 3 வரை நகோயாவில் உள்ள Paloma Mizuho மைதானத்தில் T20 வடிவில் நடைபெறவுள்ளன.

ஆண்கள் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இந்திய அணி காலிறுதி 2 இலும், பாகிஸ்தான் அணி காலிறுதி 1 இலும் விளையாடவுள்ளன.

அரை இறுதிப் பாதைகளின்படி, இவ்விரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் மட்டுமே ஒக்டோபர் 3ஆம் திகதி தங்கப் பதக்கத்திற்காக மோதிக்கொள்ள முடியும்.

பெண்கள் பிரிவிலும் இதே நிலைதான். தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி 4ஆம் இடத்திலும் உள்ளன.

பெண்கள் பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் செப்டம்பர் 22ஆம் திகதி மோதும் வாய்ப்பு உருவாகும்.

இந்திய கிரிக்கெட் அணிகள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here