இலங்கையில் இந்திய அணிக்குக் காத்திருக்கும் மாபெரும் சவால்!

0
2

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, தனது இடத்தை உயர்த்தும் நோக்குடனும் சமீபத்திய தோல்விகளின் சுமையுடனும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், காலி மைதானத்தில் அந்த மன அழுத்தத்துடன் விளையாட முடியாது.

இந்திய அணி எதிர்கொள்ளப் போகும் முக்கிய சவால்கள் குறித்துப் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் மொர்னே மோர்கல் கூறியதாவது “எங்களிடம் திறமையும் திட்டங்களும் உள்ளன. ஆனால் காலி மைதானத்தின் அதிகப்படியான வெப்பமும், கடற்கரையை ஒட்டிய ஈரப்பதமுமே (Humidity) இங்குள்ள மிகப்பெரிய சவாலாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “இங்கு பயன்படுத்தப்படும் கூக்கபுரா பந்துகள் 20 முதல் 35 ஓவர்களுக்குப் பிறகு தையல் தட்டையாகி, பந்து மெதுவாகிவிடும். புதிய பந்தில் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.” எனவும் கூறினார்.

மேலும் “பந்து மெதுவடையும் போது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் க்ரீஸைப் பயன்படுத்தும் விதம் மற்றும் ‘ஷார்ட் பால்’ (Short ball) வியூகங்களைச் சரியாகச் செயல்படுத்தி, மிகுந்த ஆற்றலுடன் விளையாட வேண்டும்.” என மொர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here