ஆகஸ்ட் 14-ல் வெளியாகிறது சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ : ஆகஸ்ட் 11 முதல் முன்பதிவு துவக்கம்!

0
5

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இத்திரைப்படத்திற்கான முன்பதிவுகள் நாளை, ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 6:00 மணி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது எனப் படக்குழு புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

இன்று படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், நடிகர் சூர்யா ஒரு பச்சிளம் குழந்தையைத் தனது கைகளில் ஏந்தியபடி மிகவும் பாசமான தந்தை தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

சூர்யாவின் முந்தைய ஆக்ஷன் மற்றும் மாஸ் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு எமோஷனல் மற்றும் ஃபீல்-குட் குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்பதை இப்போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here