அதிகாலை 1 மணிக்கு அழைத்துப் பாராட்டிய அஜித்- ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சி!

0
8

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் தொழில்முறை ரேசிங் பயணத்தை மையமாக வைத்து ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் பிரம்மாண்ட ஆவணப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்க, அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் மற்றும் ஷாலினி அஜித்குமாரின் கோல்டன் டிரோபி ஃபிலிம் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்தநிலையில் ‘இம்மார்ட்டல்’ பட விளம்பர நிகழ்வில் பேசிய ஜி.வி.பிரகாஷ், நள்ளிரவு 1 மணியளவில் போடிம் செயலி வழியே அழைத்த அஜித், டிரெய்லர் மற்றும் பின்னணி இசையைப் பாராட்டி “உங்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்” என்று உறுதியளித்ததாகக் கூறினார்.

இப்படம் வெறும் ரேசிங் விளையாட்டைப் பற்றியது மட்டுமல்லாமல், அஜித்தின் தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் அவரது சர்வதேச ரேசிங் கனவை வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவாக அமையும்.

சர்வதேசப் பந்தய களங்களில் அஜித் மற்றும் அவரது அணி சந்தித்த சவால்களைத் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லருக்கு ‘UA 13+’ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

அஜித்தின் சொந்த முயற்சியிலும் முதலீட்டிலும் உருவாகியுள்ள இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here