கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு

0
7

கொழும்பு துறைமுக வளாகத்திலுள்ள சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றைச் சோதனையிட்டபோது, அதில் இருந்து ‘ஐஸ்’ (Crystal Meth) என சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகமும் சுங்க அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போதே இந்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடொன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வணிகச் சரக்குகளுக்குள் மிகவும் நுட்பமான முறையில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இறக்குமதியாளர்கள், சுங்கத் தரகர்கள் மற்றும் இதன் பின்னணியில் உள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைக் கண்டறியும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

 

மீட்கப்பட்ட போதைப்பொருளின் துல்லியமான எடை மற்றும் சந்தைப் பெறுமதி என்பனவற்றைத் தீர்மானிப்பதற்காக, அதன் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிறப்பு பொலிஸ் குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here