2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈரான் அணி மிகவும் அரசியல்மயப்படுத்தப்பட்ட முறையில் நடத்தப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் பகாயி குற்றம் சாட்டியுள்ளார்.
விசா வழங்குவதில் ஆரம்பம் முதலே கடுமையான சிக்கல்கள் நீடித்ததாகவும், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் சம்மேளன அதிகாரிகள் பலருக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஈரான் அணி தங்குவதற்கும் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு வெளியே மாற்று இடமே வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரான் அணி உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியதை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் மார்க்வெய்ன் முல்லின் (Markwayne Mullin) மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாகக் கூறிய கருத்துக்கும் ஈரான் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

