வரவிருக்கும் துலீப் கோப்பை தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணைத் தலைவராக 15 வயதுடைய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
15 பேர் கொண்ட இந்த அணிக்கு இஷான் கிஷன் தலைமை தாங்கவுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, அதைத் தொடர்ந்து நடைபெற்ற சிம்பாப்வே T20 தொடரிலும் இடம்பெற்றதுடன், தொடரின் நாயகன் விருதையும் வென்றார்.
இந்த அணியில் மொஹமட் ஷமி, அபிமன்யு ஈஸ்வரன், முகேஷ் குமார், ஷாபாத் அகமது மற்றும் குமார் குஷாகரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
35 வயதான வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி, 2025 செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும், 2025/26 உள்ளூர் பருவத்தில் வங்காள அணிக்காக விளையாடியதுடன், IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக 14 இல் 13 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 23 ஆம் திகதி பெங்களூரில் இந்த வலயங்களுக்கு இடையிலான பல நாள் சிவப்பு பந்து கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

