ACT NOW அமைப்பினால் கொழும்பு-07 இல் உள்ள JDA Perera கலைக்கூடத்தில் (Gallery) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “Uncover” புகைப்படக் கண்காட்சியைப் பெருந்தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேற்றைய தினம் (17.07.2026) பார்வையிட்டார்.

அத்துடன், மலையகத் தமிழ் சமூகத்தின் நிலம், இருப்பிடம் மற்றும் ஏனைய மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அங்கு நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டார்.


