ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு ருமேஷ் தகுதி!

0
6

ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இன்று (30) நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தேசிய சாம்பியனான ருமேஷ் தரங்க தகுதி பெற்றுள்ளார்.

ஆரம்பச் சுற்றில் முதலிடத்தைப் பிடித்த ருமேஷ் 82.84 மீற்றர் தூரம் எறிந்து திறமையை வெளிப்படுத்தினார்.

இப்போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களான இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆகியோரும் போட்டியிட்டனர்.

அங்கு நீரஜ் சோப்ரா 79.61 மீற்றர் தூரம் எறிந்து 5ஆவது இடத்தையும், நதீம் 78.63 மீற்றர் தூரம் எறிந்து 7ஆவது இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here