சிரியாவில் கோர விபத்து: இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 35 பேர் பலி!”

0
7

“சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர்! மேலும் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் டீர் எஸ்சோர் நகரங்களை இணைக்கும் பாலைவன நெடுஞ்சாலையில், சுக்னா பகுதி அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான ஒரு பேருந்தில் சிரிய பாதுகாப்புப் படையினரும், மற்றொரு பேருந்தில் பொதுமக்களும் பயணித்துள்ளனர். இரண்டு பேருந்துகளும் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்ததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.”

“முறையான சாலைப் பராமரிப்பு இல்லாததும், அதிவேகமுமே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here