ஈரானிய மசகு எண்ணெய் விற்பனை : 60 நாட்களுக்கு அனுமதி!

0
5

ஈரானிய தயாரிப்பு மசகு எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் அனுமதி அளிக்கும் வகையில், 60 நாட்கள் செல்லுபடியாகும் பொதுவான உரிமத்தை அமெரிக்க திறைசேரி திணைக்களம் வழங்கியுள்ளது.

இந்த அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றில் “சுவிட்சர்லாந்தில் தற்போது நடைபெற்று வரும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக, ஹோர்முஸ் நீரிணையில் சுதந்திரமான மற்றும் திறந்த போக்குவரத்துப் பாதைக்கு மதிப்பளிப்பதாகவும், சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆய்வாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதாகவும் ஈரான் உறுதியளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமையவே, ஈரான் மீதான எண்ணெய் விற்பனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வகையில் அமெரிக்க திறைசேரி திணைக்களம் இந்த 60 நாட்களுக்கான பொதுவான உரிமத்தை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here