நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கும் ‘ராம் இன் லீலா’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் பாடலான ‘செப்பு சேல’ அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.
துள்ளலான திருமணக் கொண்டாட்டப் பாடலாக வெளிவந்துள்ள இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரு பிரம்மாண்டமான திருமண விழாவை மையமாகக் கொண்டு இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் ரியோ ராஜ் மற்றும் அறிமுக நாயகி வர்த்திகா ஆகியோரின் அதிரடியான நடன அசைவுகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
அங்கித் மேனனின் இசையமைப்பில், கிராமிய மணம் மாறாத அதே சமயம் நவீன பாப் தாளங்களுடன் இப்பாடல் அமைந்துள்ளது.
பாடகர் வி.எம். மகாலிங்கத்தின் குரலும், உமா தேவியின் எளிய வரிகளும் பாடலுக்குப் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

