சுவிட்சர்லாந்தில் ஆரம்பமாகியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்டார் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani), தங்களது மத்தியஸ்தப் பணி தொடரும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து கட்டார் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள காணொளியில் “இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு இறுதித் தீர்வை எட்டும் வரை, இந்த மத்தியஸ்தப் பணிகளுக்கு ஆதரவளிக்க கத்தார் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எமது பிராந்தியத்தில் கூடுதல் அமைதி, வளம் மற்றும் ஒரு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் நாங்கள் எப்போதும் ஒரு பங்காளியாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

