ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமன வழிகாட்டல்களில் திருத்தம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

0
5

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, உரிய சட்டத்தரணி குறைந்தபட்சம் 20 வருடங்களாவது உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகப் பணியாற்றவில்லை எனின், அவர் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய, தகுதிவாய்ந்த சட்டத்தரணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here