மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு

0
7

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டால், பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை குறையக்கூடும் என Bank of America தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் சராசரி விலை 93 டொலராக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படுவதால் இது 82 டொலராக குறையலாம் என்று Bank of America கூறியுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பெரும்பாலும் 70டொலர் முதல் 80 டொலர் வரையிலான விலையிலேயே வர்த்தகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக அமைதி ஒப்பந்தம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வருகிறது.

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுகிறது.

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுகின்றன.

இதன் காரணமாக, ஈரான் போர் தொடங்கிய முதல் நாளில் இருந்த விலையை விட, கச்சா எண்ணெய் விலை தற்போது மிகக் குறைந்த அளவிற்குக் சரிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here