லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலை மீது ஹிஸ்புல்லா தாக்குதல்: ஒரு வீரர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

0
6

தெற்கு லெபனானில் சனிக்கிழமை அதிகாலை ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

லெபனானின் நபடியே பகுதிக்கு அருகிலுள்ள ‘க்பார் டெப்னிட்’கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேலிய கமாண்டோ படையினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 21 வயதுடைய இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here