3-வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து: தொடரையும் கைப்பற்றியது

0
4

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

2-வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

3-வது மற்றும் கடைசி போட்டி கடந்த 25-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 354 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.

ஜோ ரூட் 9 ரன்களுடனும், எமிலியோ கே 6 ரன்களுடனும் களத்தில் இருந்தது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 270 ரன்கள் தேவைப்பட்டது.

இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எமிலியோ 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அப்போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து ஸ்மித் களம் இறங்கினார்.

இதே ஓவரின் 5-வது பந்தில் ஜோ ரூட் ரன்அவுட் ஆனார். அவர் 18 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் இங்கிலாந்து தடுமாற்றத்தை சந்தித்தது.

இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எமிலியோ 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ஸ்மித் மட்டும் தாக்குப்பிடித்து 60 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 212 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

இதனால் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here